/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம்மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம்
மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம்
மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம்
மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் துவக்கம்
ADDED : பிப் 11, 2024 01:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தொடர் போட்டிகள் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமையில் துவங்கியது.
தலைமை ஆசிரியர் பாதிரியார் ஆரோக்கியதாஸ், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மே மாதம் வரை நடைபெறும் தொடர் விளையாட்டில் ஒரு பிரிவில் 8 அணிகள் வீதம் 5 டிவிசன்களில் பிரிமியர், முதல், 2, 3, 4ம் பிரிவில் 40 அணிகள் பங்கேற்று 140 போட்டிகள் வரை விளையாடுகிறது. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ஜி.டி.என்.கலைக்கல்லுாரி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. துவக்க நாளான புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எஸ்.எஸ்.எம். அணி, பத்மாவதி பெருமாள் நினைவு அணியை 4:1 என்ற கோல்கணக்கில் வென்றது. எஸ்.எஸ்.எம். அணியின் ரிஷிகேஷ் 2, ஹிர்திக் ரோஷன், நிரஞ்சன் தலா ஒரு கோல் அடித்தனர். பத்மாவதி பெருமாள் நினைவு அணியின் கவுதம் ஒரு கோல் அடித்தார்.