ADDED : ஜன 29, 2024 06:20 AM
வேடசந்துார்: வேடசந்துார் மினுக்கம்பட்டி பெட்போர்டு அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. பள்ளி தாளாளர் சண்முகவடிவு தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் மணிமாறன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் மருத பாண்டி வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் அப்துல் நாசர், பொருளாளர் நடராஜ் வாழ்த்தி பேசினர். திண்டுக்கல், பழநி, வேடசந்துார், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நத்தம் ஆகிய பகுதிகளிலிருந்து 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 9, 12, 15, 19 வயதுகளின் அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது. வேடசந்துார் பெட்போர்ட் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேடசந்துார், பேட்டரிக் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தலைமை நடுவராக டாக்டர் கருணாகரன் பங்கேற்றார். ஏற்பாடுகளை கான்பிடென்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முக குமார்,தலைவர் பிரபாகரன் செய்தனர்.