/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று
ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று
ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று
ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று
ADDED : ஜூன் 27, 2025 12:46 AM

மின்கம்பத்தில் செடிகள்
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து புதர் மண்டியுள்ளது .இதனால் விபத்து அபாயம் உள்ளது ,அருகே செல்வோர் பயத்துடன் செல்கின்றனர் ,செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிவேல், திண்டுக்கல்.
.....---------
ரோட்டில் குவியும் குப்பை
பழநி இடும்பன்மலை அருகே வள்ளியப்பா கார்டன் நுழைவு பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டி குவிப்பதால் அசுத்தமாக உள்ளது .அப்பகுதியில் செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கார்த்திக், பழநி.
........----------வீணாகும் கழிப்பறை
அய்யலுார் எத்தலப்ப நாயக்கனுாரில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இங்கு தண்ணீர் சப்ளை வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் முன் முன் வர வேண்டும். -- மணி, அய்யலுார்.
..........----------சிரமத்தில் வாகன ஓட்டிகள்
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். டூவீலரில் வருபவர்கள் சரிக்கி கீழே விழுகின்றனர் .ஜல்லிகற்களை அகற்ற உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வினோத், திண்டுக்கல்.
..............----------விபத்து அபாயத்தில் மரம்
அய்யலுார் மணியகாரன்பட்டி வீடு அருகே புளியமரம் காய்ந்த நிலையில் உள்ளது .இதனால் விபத்து அபாயமும் உள்ளது .இதன் அருகே செல்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர். மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தரம்,மணியகாரண்பட்டி.
,................----------கழிவால் சுகாதாரக்கேடு
வேடசந்துார் கரூர் ரோட்டில் ரங்கமலை கண்மாய் அருகே ரோட்டோரம் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவு பொருட்களால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது . இதோடு அப்பகுதியில் தொற்றுக்கு வழி வகுக்கிறது. --எஸ்.சிந்தனை செல்வன், வேடசந்துார்.
...........----------தெருவில் கழிவுநீர் தேக்கம்
திண்டுக்கல் சத்திரம் தெருவில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி ரோட்டோரத்தில் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கழிவு நீர் தேங்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பழனிச்சாமி, திண்டுக்கல்.
..........-----------