/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகைபழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை
பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை
பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை
பழநியில் பேரிடர் மீட்பு படை ஒத்திகை
ADDED : ஜூன் 15, 2024 06:36 AM
பழநி : சென்னை, அரக்கோணம் பகுதி தேசிய பேரிடர் மீட்பு படையினர் சங்கர பாண்டியன் தலைமையில் 28 வீரர்கள் பழநிக்கு வந்துள்ளனர். பழநி முருகன் கோயில் செல்லும் ரோப்கார் சேவையில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் பக்தர்கள் சிக்கிக் கொண்டால் பாதுகாப்பது குறித்த விளக்க ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இதில் தீயணைப்புத் துறையினர்,கோயில் பணியாளர்களும் இணைந்தனர்.
அரசு ஆம்புலன்ஸ், கோயில் ஆம்புலன்ஸ் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை ரோப் கார் நிலையத்தில் தயாராக இருந்தது.
ஆர்.டி.ஓ., சரவணன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் பொறியாளர் குழுவினர், ரோப் கார் கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர்.