/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம்; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம்; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம்; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம்; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் ஏமாற்றம்; மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : செப் 17, 2025 12:31 AM

மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நெல், கரும்பு, காய்கறிகள், வாழை, தென்னை விவசாயம் அதிக அளவில் நடக்கிறது. விவசாயத்திற்கு நீர் ஆதாரமான அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இருந்தாலும் பருவமழை தாமதமானால் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குளத்து பாசனம் நடைபெறும் விவசாய நிலங்கள் குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்டு உள்ளது. நேற்றைய காலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 65 அடி உயரம் தண்ணீர் தேக்கி வைக்கும் பாலாறுபொருந்தலாறு அணையில் 25.79 அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து குடிநீருக்கு 10 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. 80 அடி உயரம் உடைய குதிரையாறு அணையில் 41.59 அடி உயரம் தண்ணீர் உள்ளது. 8 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 66.47 அடி உடைய வரதமாநதி அணையில் 57.94 அடி தண்ணீர் உள்ளது. ஐந்து கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. 90 அடி உயரம் உள்ள பரப்பலாறு அணையில் 66.39 அடி தண்ணீர் உள்ளது. 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 27 அடி உயரம் உள்ள குடகனாறு அணையில் 18.90 அடி , 39.37 அடி நாங்காஞ்சியாறு அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. அணைகளுக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.இதனால் விவசாயிகள் சாகுபடி செய்யமுடியாது மழையை நம்பி தினமும் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.