/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல் வருவாய் அலுவலர்கள் தர்ணா திண்டுக்கல் வருவாய் அலுவலர்கள் தர்ணா
திண்டுக்கல் வருவாய் அலுவலர்கள் தர்ணா
திண்டுக்கல் வருவாய் அலுவலர்கள் தர்ணா
திண்டுக்கல் வருவாய் அலுவலர்கள் தர்ணா
ADDED : ஜூன் 26, 2025 01:41 AM

திண்டுக்கல்:' வருவாய் ,பேரிடர் மேலாண்மை, நில அளவைத்துறைகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உட்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பாஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி பேசினார் . போராட்டத்தால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வருவாய் அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.