/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாழான அங்கன்வாடி; வீட்டு வாசலில் கழிவுநீர் கவலையில் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள் பாழான அங்கன்வாடி; வீட்டு வாசலில் கழிவுநீர் கவலையில் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்
பாழான அங்கன்வாடி; வீட்டு வாசலில் கழிவுநீர் கவலையில் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்
பாழான அங்கன்வாடி; வீட்டு வாசலில் கழிவுநீர் கவலையில் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்
பாழான அங்கன்வாடி; வீட்டு வாசலில் கழிவுநீர் கவலையில் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்

விஷ ஜந்துகள் நடமாட்டம்
ரமேஷ், ராஜீவ்காந்தி நகர்: அங்கன்வாடி மையக் கட்டடம் பாழடைந்துள்ளது. கட்டடம் சேதமடைந்துள்ளதால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். கட்டடம் சிறிதாக இருப்பதால் கூடுதலாக குழந்தைகளை சேர்க்க இயலவில்லை. வார்டு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. போலீஸ் குடியிருப்பு பகுதியில் புதர்கள் மண்டி விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது.
நோய் பரவும் அபாயம்
நாகலட்சுமி, கனரா காலனி:அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் வழிந்து வீட்டு வாசலில் தேங்குகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் மேம்பால பகுதியில் சிலர் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை அருந்துமிடமாக பயன்படுத்துகின்றனர். மது பாட்டில்களை உடைத்து வீசுவதால் அச்சமாக உள்ளது.
விரைவில் தீர்வு
ராஜப்பா, கவுன்சிலர், (தி.மு.க.,துணை மேயர்) : அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட ரவுண்ட் ரோடு அனுமந்த பாலம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் குடியிருப்பு பெரிய பகுதி. தனியார் இடத்தில் புதர் மண்டி கிடக்கிறது. அனைத்து வசதிகளும் செய்து குடியிருப்போர் நலச்சங்கத்திடம் வழங்கிவிட்டோம். அவர்கள் பராமரித்து கொள்வதாக தெரிவித்திருந்தனர். பாதாள சாக்கடை பிரச்னைக்கு மேயர், கமிஷனருடன் ஆலோசனை நடத்தினோம். நகர் முழுவதும் அவுட்சோர்ஸ் மூலம் ஆட்கள் நியமித்து இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண பரிசீலித்துள்ளோம். நாய் தொல்லைக்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தி விடப்பட்டுள்ளது. அவற்றை கொல்ல இயலாது. வார்டு பகுதியில் கொசு மருந்து ரெகுலராக அடிக்கிறோம்.