/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இ சேவை மையங்களில் கூடுதல் வசூலை தடுக்க துறைரீதியான நடவடிக்கை அவசியம்இ சேவை மையங்களில் கூடுதல் வசூலை தடுக்க துறைரீதியான நடவடிக்கை அவசியம்
இ சேவை மையங்களில் கூடுதல் வசூலை தடுக்க துறைரீதியான நடவடிக்கை அவசியம்
இ சேவை மையங்களில் கூடுதல் வசூலை தடுக்க துறைரீதியான நடவடிக்கை அவசியம்
இ சேவை மையங்களில் கூடுதல் வசூலை தடுக்க துறைரீதியான நடவடிக்கை அவசியம்
ADDED : ஜன 29, 2024 06:19 AM

மாவட்டத்தில் ஒரு மத்திய கூட்டுறவு வங்கி,33 கிளை வங்கிகள்,6 நிலவள வங்கிகள்,4 நகர கூட்டுறவு வங்கிகள் இவை சார்ந்த 3 கடன் சங்கங்கள், 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இத்துறையின் சார்பில் மாவட்டத்தில் 175க்கு மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன் வரை இவற்றின் மூலமாக ஆண்டிற்கு ரூ.2 கோடி வரை வருவாய் கிடைத்தது.
இங்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது முதல், ஆதார், முகவரி, திருத்தங்கள், கல்வித்துறை சார்ந்த விண்ணப்பங்கள், அரசு தேர்வுத்துறை விண்ணப்பங்கள் பதிவு செய்வது, நில பட்டா, சிட்டா, அடங்கல் எடுத்தல், மத்திய மாநில அரசுகளின் பிற சேவைகள் என, ஏராளமான பணிகள் நடக்கின்றன. இவற்றிற்கு நிர்ணயித்த அரசு கட்டண வசூல் மட்டுமே நடந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இச்சேவையில் பெரும் தொய்வு நிலவுகிறது. பல மையங்கள், பெரும்பாலும் பூட்டியுள்ளன.
இணைய சேவை துண்டிப்பு பணியாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களை கூறி அலைக்கழிக்கும் அவலநிலை தொடர்கிறது.
அலுவலக இதர செலவினங்களுக்கு எனக்கூறி, நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக வசூல் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.