ADDED : பிப் 06, 2024 07:13 AM
கோபால்பட்டி : -கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டியில் 8 வயது சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதைடுத்து அங்கு கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், நோய் பரப்பும் ஆதர நிலைகளை அழித்தல், துப்புரவு பணி, மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
திம்மணநல்லூர் ஊராட்சி தலைவர் கவிதா தர்மராஜ்,மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன், திருப்பதி, குணசீலன், ஊராட்சி செயலாளர் வெற்றி வேந்தன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன. மாவட்ட பூச்சியியல் வல்லுநர் தெய்வேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.