ADDED : செப் 27, 2025 04:29 AM
பழநி: அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஷாக ஒரு மாதம் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பழநியில் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேல் ரவுண்டானா பகுதியில் நடந்த இதற்கு மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சம்மேளன தலைவர் கணேசன், மாநில குழு உறுப்பினர் மோகனா கலந்து கொண்டனர்.


