ADDED : ஜன 06, 2024 06:33 AM

திண்டுக்கல்: டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைமை நிலைய செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் சுரேஷ்பாபு,வட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
*நத்தம் -நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்க வி.ஏ.ஓ., சங்கத் தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.