ADDED : ஜன 13, 2024 05:25 AM
ஒட்டன்சத்திரம், : லெக்கையன்கோட்டையில் இருந்து அரசப்பபிள்ளைபட்டி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை கட்டடம் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பில் இருந்தது.
மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.