Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்

சேதமடைந்த ரோடுகள்; இடியும் நிலையில் தொட்டி சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 21, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: இடையும் நிலையில் சேதமான தரைமேல் தொட்டி, சேதமடைந்த ரோடுகள் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 3 வது வார்டில் பிரச்னைகள் ஏராளம் உள்ளது.

சங்குபிள்ளைபுதுார், ஏ.பி. காலனி, கே.கே.நகர், ஆர்.எஸ்.பி நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சங்குபிள்ளைபுதுாரில் நடுத்தெருவில் மின்கம்பம் உள்ளது.

இதனால் இதன்வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

கே கே. நகர் பகுதியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வார்டுக்குள் குடிநீர் பிரச்னை இல்லை. ஏ.பி. காலனிக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் போதுமான வசதிகளை ஏற்படுத்தி சுற்று சுவர் அமைக்க வேண்டும். ஏ.பி.காலனி வடக்கு பகுதியில் சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்துள்ளது. இதனை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.கே.நகர் பகுதியில் ரோடு வசதி இல்லை. வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்குகிறது. குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

நடுத்தெருவில் மின் கம்பம்


எம்.ஆறுமுகம், தேசியவாத காங்., மாவட்ட தலைவர், சங்கு பிள்ளைபுதுார்: சங்குபிள்ளைபுதுாரில் தெருவின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் வாகனங்களை செல்ல சிரமமாக உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். தரை மேல் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும். கொசு தொல்லையை போக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். தேவையான இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

நடவடிக்கை எடுங்க


ரகுபதி, மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர், ஏ.பி.காலனி: துார்வாரப்பட்ட சாக்கடையில் உள்ள கழிவுகள் மேலே கொட்டப்பட்டு அதனை எடுக்க தாமதமாவதால் மீண்டும் அதற்குள் விழுகிறது. கூடுதல் பணியாளர்களை நியமித்து சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பணிக்காக தெருக்களில் தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றம்


செல்வராஜ், கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக கே.கே. நகரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சேதமடைந்த ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும். சாக்கடைகள் துார்வாரப்படுகிறது. தெருக்களில் எல் .இ .டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கே.கே நகர் பகுதியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேவையான இடங்களில் சாக்கடைகள் அமைக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us