/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்டுக்காததால் பாதிப்பு: குப்பையில் உணவு தேடும் விலங்குகள்: ஜீரண பிரச்னையால் பலியாகும் அபாயம் கண்டுக்காததால் பாதிப்பு: குப்பையில் உணவு தேடும் விலங்குகள்: ஜீரண பிரச்னையால் பலியாகும் அபாயம்
கண்டுக்காததால் பாதிப்பு: குப்பையில் உணவு தேடும் விலங்குகள்: ஜீரண பிரச்னையால் பலியாகும் அபாயம்
கண்டுக்காததால் பாதிப்பு: குப்பையில் உணவு தேடும் விலங்குகள்: ஜீரண பிரச்னையால் பலியாகும் அபாயம்
கண்டுக்காததால் பாதிப்பு: குப்பையில் உணவு தேடும் விலங்குகள்: ஜீரண பிரச்னையால் பலியாகும் அபாயம்
ADDED : ஜூன் 14, 2025 12:24 AM

மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகள் ஏராளமாக உள்ளன. கொடைக்கானல், பழநி புல்லாவெளி, பரப்பலாறு, நத்தம்,சிறுமலை,ஆடலுார், பன்றிமலை,தடியன்குடிசை உள்ளிட்ட பகுதிகள் மலை சார்ந்தும், சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக பழநி, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரோட்டோர வனப்பகுதி மார்க்கமாகவே வாகனங்களில் வருகின்றனர்.
இவர்கள் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவு பொட்டலங்களை வீசி செல்கின்றனர். இதிலிருந்து உணவுகளை தேடும் வன விலங்குகள் பிளாஸ்டிக் பைகளுடன் உண்ணுவதால் ஜீரணப் பிரச்னை ஏற்பட்டு பலியாகின்றன.
இதில் குரங்கு, காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட விலங்குகள் அடங்கும்.
மலை சார்ந்த ரோடுகளில் உணவுப் பொட்டலங்களை வீசுவதால் இது போன்ற அசாதாரண நிலை ஏற்படுகிறது.
வன விலங்குகள் பலியாகும் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வன விலங்குகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.