/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிரிக்கெட் லீக்;நத்தம் என்.பி.ஆர்.கல்லுாரி வெற்றிகிரிக்கெட் லீக்;நத்தம் என்.பி.ஆர்.கல்லுாரி வெற்றி
கிரிக்கெட் லீக்;நத்தம் என்.பி.ஆர்.கல்லுாரி வெற்றி
கிரிக்கெட் லீக்;நத்தம் என்.பி.ஆர்.கல்லுாரி வெற்றி
கிரிக்கெட் லீக்;நத்தம் என்.பி.ஆர்.கல்லுாரி வெற்றி
ADDED : பிப் 11, 2024 01:14 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், என்.பி.ஆர் கல்வி குழுமம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான என்.பி.ஆர். கோப்பை லீக் போட்டியில் நத்தம் என்.பி.ஆர் பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்றது
என்.பி.ஆர். மேட்டிங் மைதானத்தில் நடந்த Hlfy போட்டியில் நத்தம் என்.பி.ஆர். கலை, அறிவியல் கல்லுாரி அணி 22 ஓவரில் 136ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. சச்சின் 62ரன்கள், சரண் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லுாரி அணி 17 ஓவரில் 77ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.சச்சின் 3, ரிஷிகுமார் 4 விக்கெட் எடுத்தனர்..ஆர்.வி.எஸ். கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல்.ஆர்.வி.எஸ்..எஜிகேஷனல் டிரஸ்ட் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் அணி 16.4 ஓவரில் 104ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ராகவன் 30ரன்கள், கவுதம் 3, ஜான் பிரகாசம் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் பார்வதி கலை, அறிவியல் கல்லுாரி 23.2 ஓவரில் 93 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கணேசமூர்த்தி, ஐயப்பன் தலா 3 விக்கெட் எடுத்தனர். ஸ்ரீ.வி.கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் எஸ்.பி.எம்.சி.இ.டி. அணி 25 ஓவரில் 6 விக்கெட்இழந்து 137ரன்கள் எடுத்தது. மணிகண்டன் 40, கேசவராஜ் 26ரன்கள், சபரி 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரி அணி 23.4 ஓவரில் 7 விக்கெட் இழந்து 138ரன்கள் எடுத்து வென்றது. பாண்டி 57, சபரி 44ரன்கள் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் ஆத்துார் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லுாரி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து 128ரன்கள் எடுத்தது. பெரியசாமி 54ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் வளாக பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி அணி 23 ஓவரில் 7 விக்கெட் இழந்து 129ரன்கள் எடுத்து வென்றது. விமல்குமார் 40ரன்கள், சதீஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர்.
ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் ஸ்ரீ.வீ. கலை, அறிவியல் கல்லுாரி அணி 9.5 ஓவரில்56ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. தினேஷ் 5, கமல்குமார் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்தஅய்யலுார் ஆர்.வி.எஸ். குமரன் கலை, அறிவியல் கல்லுாரி அணி 6.1 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 57ரன்கள் எடுத்தது. மதன் 25 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தார்.என்.பி.ஆர். மேட்டிங் மைதானத்தில் நடந்த போட்டியில் வேடசந்துார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அணி 18.4 ஓவரில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கவினரசு 4 விக்கெட் எடுத்தார்.
சேசிங் செய்த நத்தம்என்.பி.ஆர்.சி.இ.டி. அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78ரன்கள் எடுத்து வென்றது. சரண்சக்திவேல் 57 (நாட்அவுட்) ரன்கள் எடுத்தார்.