Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிரிக்கெட் லீக்; ஜான்பால் பள்ளி வெற்றி

கிரிக்கெட் லீக்; ஜான்பால் பள்ளி வெற்றி

கிரிக்கெட் லீக்; ஜான்பால் பள்ளி வெற்றி

கிரிக்கெட் லீக்; ஜான்பால் பள்ளி வெற்றி

ADDED : ஜன 29, 2024 06:11 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரி சார்பில்ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த பி.எஸ்.என்.ஏ.கோப்பையின் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் லீக் போட்டியில் திண்டுக்கல் ஜான்பால்பள்ளி அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 30 ஓவரில் 8 விக்கெட் இழந்து 215ரன்கள் எடுத்தது.

ஜெய் சிவாஸ்ரீ 42,ஆர்யன்கட்கர் 64ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த வேடசந்துார்பெட்போர்ட் அகாடமி எம்.ஹெச்.எஸ்.எஸ். பள்ளி 7.3ஓவரில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.

தஷ்வின் 3, ஹேமந்த் 6 விக்கெட் எடுத்தனர்.திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளி 30 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.தீபன் 57, நாட்ராயதருண் 25 (நாட்அவுட்)ரன்கள், சித்தேஷ் கார்த்திக் 3 விக்கெட் எடுத்தனர்.

சேசிங் செய்த ஒட்டன்சத்திரம்ஸ்ரீகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ், அணி 23.5 ஓவரில் 74 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அபிலாஷ் 4,ஸ்ரீஹரிஷ் 3 விக்கெட் எடுத்தனர்.

திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 30 ஓவரில் 5 விக்கெட் இழந்து 235ரன்கள் எடுத்தது. தஷ்வின் 33,ஹேமந்த் 56, ஆர்யன் கட்கர் 51, சிவேஷ் தருண் 43 ரன்கள் எடுத்தனர்.

சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் பட்ஸ்பிளோரிங் ஹிந்து வித்யாலயா அணி 25 ஓவர்களில் 70ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஹேமந்த்,சிவேஷ்தருண் தலா 3 விக்கெட்எடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us