/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிரிக்கெட் லீக்; வித்யோதயா அணிக்கு கோப்பைகிரிக்கெட் லீக்; வித்யோதயா அணிக்கு கோப்பை
கிரிக்கெட் லீக்; வித்யோதயா அணிக்கு கோப்பை
கிரிக்கெட் லீக்; வித்யோதயா அணிக்கு கோப்பை
கிரிக்கெட் லீக்; வித்யோதயா அணிக்கு கோப்பை
ADDED : பிப் 06, 2024 07:18 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.கல்லுாரி மைதானத்தில் நடந்த பி.எஸ்.என்.ஏ.கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையேயான லீக் இறுதி போட்டியில் திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி கோப்பையை வென்றது.
திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணி 45 ஓவரில் 9 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது.
ஓஷோ 38, சிவேஷ்தருண் 29, பிரித்தித் 28ரன்கள், ஸ்ரீஹரிஷ் 3 விக்கெட் எடுத்தனர்.
சேசிங் செய்த திண்டுக்கல் ஜான்பால்மேல்நிலைப்பள்ளி அணி 36.4 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. தீபன் 33, ஷார்வின் 31ரன்கள், முகமது பாஹீம் 5 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த போட்டிகளின் நாயகர்களாக பிரசித்தி வித்யோதயா அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக ஓஷோ, சிறந்த ஆல்ரவுண்டராக ஹேமந்த், சிவேஷ்தருண், ஜான்பால் மேல்நிலைப்பள்ளி அணியின் சிறந்த பவுலராக அபிலாஷ், தொடரின் சிறந்த வீரராக தீபன் தேர்ந்தெடுக்க பட்டனர்.