/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநகராட்சி வரி உயர்வு: வர்த்தகர் சங்கம் அதிருப்தி மாநகராட்சி வரி உயர்வு: வர்த்தகர் சங்கம் அதிருப்தி
மாநகராட்சி வரி உயர்வு: வர்த்தகர் சங்கம் அதிருப்தி
மாநகராட்சி வரி உயர்வு: வர்த்தகர் சங்கம் அதிருப்தி
மாநகராட்சி வரி உயர்வு: வர்த்தகர் சங்கம் அதிருப்தி
ADDED : ஜூன் 03, 2025 12:42 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன், மேயர் இளமதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : மாநகராட்சியினால் விதிக்கப்பட்டுள்ள சொத்துவரி, இதர வரிகள் செலுத்துவது மிகவும் இயலாததாக உள்ளது.
வரி உயர்வுகள் எங்களுடைய வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. நாங்கள் வியாபார நடைமுறைகளை செய்வதற்கு இயலாத சூழ்நிலையில் உள்ளோம். சமீப காலமாக பலர் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் சொத்துவரி, வாடகை உயர்த்தப்பட்டு செலுத்த முடியாததுதான். ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்வு செலுத்த இயலாதது மற்ற மாநகராட்சியுடன் ஒப்பிடுகையில் மிக கூடுதலாக உள்ளது. இது தொடர்பாக கடிதம் அனுப்பியும் வரிகுறைப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக வரிகளை உயர்த்தி கொண்டே தான் இருக்கிறது.
வரிவசூல் செய்யும் ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம், வணிகர்களை மிரட்டும் போக்கும், வரியை உடனடியாக கட்டச்சொல்லி வற்புறுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது. அனைத்து வணிகர்களும் ஒருமித்த கருத்துக்களோடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதற்கு தக்க தீர்வு காண வேண்டும்.
இல்லையெனில் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துக்கேற்ப தீவிர நடவடிக்கைகளில் இறங்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.