ADDED : ஜன 06, 2024 06:29 AM

திண்டுக்கல்: அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , மத்திய கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் தர்ணா போராட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைவர் அர்சத் அப்துல்லா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சசிகலா பங்கேற்றார். துணை பொதுச்செயலாளர் கடல்கண்ணன் நன்றி கூறினார்.