ADDED : மார் 17, 2025 05:47 AM
வடமதுரை: வடமதுரையில் தமிழ்நாடு ஹிந்து ஆலய பாதுகாப்பு முன்னணி சார்பாக கலந்தாய்வு, பொறுப்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது.
மாநில செயலாளர் ஆர்.மருதமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், கண்ணன், கே.மருதமுத்து, பொருளாளர் அழகர்சாமி, வடமதுரை ஒன்றிய செயலாளர்கள் கார்த்தி, முருகபெருமாள், ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவர் ராஜேந்திரகுமார் பங்கேற்றனர்.