/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயிலிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி பலி ரயிலிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி பலி
ரயிலிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி பலி
ரயிலிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி பலி
ரயிலிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி பலி
ADDED : செப் 11, 2025 05:36 AM
திண்டுக்கல் : மேற்குவங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரை செல்லும் புருலியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலையில் திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி நோக்கி சென்றது. அம்பாத்துரை ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற போது முன்பதிவில்லாத பெட்டியில் இருந்து ஒருவர் தவறி கீழே விழுந்தார். ரயில்வே உதவி எண்ணுக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர்.
ரயில்வே எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் உடலை மீட்டனர். விசாரணையில், ஜார்கண்ட் மாநிலம் பந்தஜோரியை சேர்ந்த கட்டட கூலி தொழிலாளி மோனேஷ்வர் ஹெம்பராம் 41 ,என்பது தெரிந்தது.