/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநியில் வெளிச்சத்துக்கு வந்த காங்கிரஸ் கோஷ்டி பூசல்பழநியில் வெளிச்சத்துக்கு வந்த காங்கிரஸ் கோஷ்டி பூசல்
பழநியில் வெளிச்சத்துக்கு வந்த காங்கிரஸ் கோஷ்டி பூசல்
பழநியில் வெளிச்சத்துக்கு வந்த காங்கிரஸ் கோஷ்டி பூசல்
பழநியில் வெளிச்சத்துக்கு வந்த காங்கிரஸ் கோஷ்டி பூசல்
ADDED : பிப் 25, 2024 05:51 AM
பழநி : பழநியில் காங்., கட்சியினர் ஒரே நாளில் இரு பிரிவாக கூட்டம் நடத்த காங்., கோஷ்டி பூசல் வெளிச்சத்திற்கு வந்தது.
காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவராக உள்ள சதீஷ்குமாரை கண்டித்து மேற்கு மண்டல தலைவர் வீரமணி தலைமையில் பழநியில் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் முத்து விஜயன் கலந்து கொண்டார்.
இது போல் பழநி அடிவாரம் பகுதி திருமண மண்டபத்தில் காங்கிரசின் மற்றொரு பிரிவினர் நகர தலைவர் மாரிக்கண்ணு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பழநியில் காங்.,ல் இரு கோஷ்டியாக உள்ளநிலையில் இரு தரப்பினரும் தங்களாகவே நகர் தலைவர் அறிவித்து கொண்டனர். மாரிக்கண்ணு கூறுகையில், பழநி நகரத் தலைவராக செயல்பட்டு வருகிறேன். இரு கூட்டங்கள் நடத்துவது ஏற்புடையதல்ல. கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எங்களுக்கு அந்த கூட்டத்தில் அழைப்பு விடுத்திருந்தால் கலந்து கொண்டிருப்போம். அந்தகூட்டத்தில் கலந்து கொண்ட முத்து விஜயன் முன்னாள் நகர தலைவராக செயல்பட்டார் '' என்றார்.
முத்து விஜயன் கூறுகையில், நகர தலைவர்களை மாநில தலைவர் மாற்ற வேண்டும். ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் சதீஷ்குமார் வாய்மொழி உத்தரவாக நகர தலைவரை அறிவித்துள்ளார். இது ஏற்கத் தகுந்தது அல்ல. எங்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர் ''என்றார்.