/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திருவிழா கடைகளில் தின்பண்டங்கள் பறிமுதல்திருவிழா கடைகளில் தின்பண்டங்கள் பறிமுதல்
திருவிழா கடைகளில் தின்பண்டங்கள் பறிமுதல்
திருவிழா கடைகளில் தின்பண்டங்கள் பறிமுதல்
திருவிழா கடைகளில் தின்பண்டங்கள் பறிமுதல்
ADDED : பிப் 24, 2024 04:42 AM
திண்டுக்கல : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் விழாவை யொட்டி அமைக்கப்பட்டிருந்த கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனையில் மூன்று கடைகளிலிருந்த கெட்டு போன 50 கிலோ எடை உணவு பண்டங்களை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட குழுவினர நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, மேற்கு ரதவீதி காந்திஜி நடுநிலை பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து சாப்பாட்டின் தரம், சமையலறை பராமரிப்புகளை மேற்பார்வையிட்டனர்.
அதன்பின் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி கோயில் வளாகத்திலும், பின்புறமுமாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பண்டங்களை ஆய்வு செய்தனர்.
கெட்டு போன, தரமற்ற 50கிலோ எடையுள்ள உணவு பண்டங்களை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர்களிடம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.