/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தி.மு.க., நிர்வாகி மீது புகார் கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தி.மு.க., நிர்வாகி மீது புகார்
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தி.மு.க., நிர்வாகி மீது புகார்
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தி.மு.க., நிர்வாகி மீது புகார்
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ADDED : மே 25, 2025 01:48 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே பூதமரத்துப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழா, மே, 20ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 'வள்ளி திருமணம்' நாடகம் கோவில் கலையரங்கில் நடப்பது வழக்கம்.
அப்பகுதி தி.மு.க., கிளை செயலர் குணசேகரன், அவரது குடும்பத்தினர், இரு ஆண்டுகளுக்கு முன், டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி, கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
தற்போது, கோவிலின் நாடக மேடை இடத்தை தங்கள் இடம் எனக்கூறி வருகின்றனர். இதுகுறித்து, அறநிலையத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த விடாமல், அவர்கள் பிரச்னை செய்வதாக கூறி, பெண்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர்.