ADDED : ஜன 04, 2024 02:47 AM

பழநி: பழநியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு , தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
100 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வளையல், பழங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மதிய உணவு வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது. பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், தி.மு.க., நகரத் தலைவர் வேலுமணி கலந்து கொண்டனர்.