Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் 'கல்லுாரிக் கனவு' நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் 'கல்லுாரிக் கனவு' நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் 'கல்லுாரிக் கனவு' நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் 'கல்லுாரிக் கனவு' நிகழ்ச்சி

ADDED : மே 16, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'கல்லுாரிக் கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் நடந்தது.

கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது:மாணவர்களுக்கான தெளிவான வழிகாட்டும் நிகழ்ச்சியாக இது உள்ளது. அங்கன்வாடி முதல் யுபிஎஸ்சி தேர்வு வரை அரசு சார்ந்த நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கலெக்டர் அலுவல வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 18004 250047 , 75988 66000 ல் தொடர்புகொண்டு சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்றார்.

எஸ்.பி., பிரதீப், சி.இ.ஓ., உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிரபாவதி, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் பிரபாகரன், ஜி.டி.என்., கல்லுாரி முதல்வர் சரவணன், சட்டக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us