ADDED : மே 29, 2025 02:05 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த இம் முகாமுக்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எதிர்காலம், வேலைவாய்ப்பு குறித்து தெளிவு ஏற்பட மாணவர்களிடம் கலெக்டர் ஆலோசனை வழங்கினார். பெற்றோரை இழந்தவர்களுக்கு உயர்கல்வி உதவிக்கான நடவடிக்கை மேற்கொண்டார்.பொருளாதார ரீதியாக சிரமப்படும் வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு பள்ளி மாணவி நதியா தனியார் கல்லுாரியில் உயர்கல்வி சேர்க்கைக்கு கலெக்டர் உறுதி செய்தார்.