ADDED : செப் 17, 2025 03:12 AM
கீரனூர்:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வசித்த கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழநி கீரனுாரை சேர்ந்தவர் ஹசன் முகமது 34. போலீஸ் ஆயுதப்படையில் 2016ல் சேர்ந்த இவர் சமீபமாக கோவை ஆயுதப்படையில் பணிபுரிந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீரனுார் போலீசார் விசாரித்தனர்.