/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேங்காய் விலை தொடர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி தேங்காய் விலை தொடர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேங்காய் விலை தொடர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேங்காய் விலை தொடர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேங்காய் விலை தொடர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 25, 2025 02:57 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்கள், கேரள மாநில எல்லை பகுதி மாவட்டங்களில் தேங்காய் உற்பத்தி அதிகம் உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் தேங்காய் உற்பத்தி உள்ளது. தென்னை மரத்தில் ஆண்டுக்கு 7 முறை தேங்காய்கள் வெட்டப்படும்.
தற்போது கோடை காலமாக இருப்பதால் தேங்காய் அளவு சிறியதாகவே இருக்கும். தற்போது தேங்காய் ஒன்றை சராசரியாக ரூ.13 முதல் 14 வரை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை உயர்வு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தேங்காய் சில்லரை விலையில் காய் ஒன்றுக்கு ரூ.25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தென்னை விவசாயிகள் தற்போது வியாபாரிகள் வழங்கும் ரூ.13 முதல் 14 வரையிலான விலையால் பெரிய அளவில் லாபம் பெறா விட்டாலும் நஷ்டம் இல்லாமல் உள்ளனர்.