/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ செயற்கை நுண்ணறிவில் தமிழுக்கான செம்மொழி தரவகம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் தகவல் செயற்கை நுண்ணறிவில் தமிழுக்கான செம்மொழி தரவகம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் தகவல்
செயற்கை நுண்ணறிவில் தமிழுக்கான செம்மொழி தரவகம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் தகவல்
செயற்கை நுண்ணறிவில் தமிழுக்கான செம்மொழி தரவகம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் தகவல்
செயற்கை நுண்ணறிவில் தமிழுக்கான செம்மொழி தரவகம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் தகவல்
ADDED : செப் 12, 2025 04:31 AM

சின்னாளபட்டி: ''செயற்கை நுண்ணறிவில் செம்மொழி தமிழை உள்ளீடு செய்வதற்கான தனி வல்லுனர் குழுவை அமைத்து செம்மொழி தரவகத்தை உருவாக்கி வருவதாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் புவனேஸ்வரி பேசினார்.
காந்திகிராம பல்கலையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் செம்மொழி தமிழ் குறித்த பயிலரங்கம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு பல்துறை அறிவினை உள்ளடக்கியது. இதில் ஈடுபட பல்வேறு துறைகள் சார்ந்த அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
போதிய அளவு தகவல்கள் தெரிந்திருந்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவுக்கு ஈடு கொடுத்து நாம் முன்னேற முடியும். இதன் வளர்ச்சியில் தற்போது டிரைவர் இல்லாத கார் அறிமுகமாகிவிட்டது. இதே சூழல் பள்ளி, கல்லுாரிகளிலும் ஆசிரியர் தேவையில்லாத நிலை ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை புரிந்து செயல்பட்டால் மட்டுமே தற்போதைய சூழலில் வெற்றி பெற முடியும் ''என்றார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் புவனேஸ்வரி பேசுகையில், செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் செல்வாக்கு பெற்றுள்ளது. மருத்துவ துறையில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவில் செம்மொழி தமிழை உள்ளீடு செய்வதற்கான தனி வல்லுனர் குழுவை அமைத்து செம்மொழி தரவகத்தை உருவாக்கி வருகிறோம். கல்லுாரி, பள்ளி ஆசிரியர், ஆய்வாளர்கள், தமிழ் மாணவர்கள், நுாலகர்களுக்கு இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சார்ந்த ஆன்லைன் படிப்புகளையும் செயற்கை நுண்ணறிவு வழியாக கற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவில் தமிழ் சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்வதற்கும் தமிழ் மொழியை உலக மொழிகளுக்கு இணையாக மேம்படுத்துவதற்கும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றறிந்து பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி பயிலரங்கை துவக்கி வைத்தார்.
தமிழ், இந்திய மொழிகள் கிராமிய கலைகள் புலதலைவர் ஷாஜி, பேராசிரியர் கலாவதி, தரவு அறிவியல் மைய இயக்குனர் மேரிசாந்திராணி, புதுவை பல்கலை இணை பேராசிரியர் தனலட்சுமி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன நிரலாளர் அகிலன் பேசினர். பேராசிரியர் முத்தையா வரவேற்றார். இணை பேராசிரியர் கேசவராஜராஜன் நன்றி கூறினார்.