ADDED : செப் 18, 2025 06:03 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் ரோலர் ஸ்கேட்டிங் ஆசோசியேஷன் சார்பில் செப். 28 ல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி , மாநில போட்டிக்கான வீரர்கள் தேர்வும் திருச்சி ரோட்டில் உள்ள சீலப்பாடி வித்யாபாரதி குழுமத்தில் நடக்க உள்ளது. ஸ்பீடு குவாட், ஸ்பீடு இன்லைன், ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கும் இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் www.indiaskate.com ல் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெறுபோருக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவிற்கான மதிப்பெண் வழங்கப்படும். 23 ம் தேதி பதிவு செய்ய கடைசி நாள். விவரங்களுக்கு 89254 1230, 63743 90603 ல் அணுகலாம்.
......................
குங் பூ போட்டிகள்
திண்டுக்கல் ,செப்.18
7 வது மாநில அளவிலான குங் பூ போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் செப்.14 ல் நடந்தது. 350 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட குங் பூ சங்கத்தின் சார்பில் பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் 40 பேர் கலந்து கொண்ட இதில் 15 தங்கம், 11 வெள்ளி , 7 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பிற்கான அதிக புள்ளிகள் பெற்றனர். வெற்றி பெற்றோரை சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.