/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் வைகாசி விசாக விழாவில் திருஊடல் பழநியில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்
பழநியில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்
பழநியில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்
பழநியில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்
ADDED : ஜூன் 13, 2025 03:02 AM

பழநி: பழநி முருகன் கோயில் வைகாசி விசாக விழாவில் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகிகோயிலில் ஜூன் 3ல் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
ஜூன் 8ல் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், ஜூன் 9 ல் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு பெரியநாயகிஅம்மன் கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைந்தது.