Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காவிரி குடிநீர் பணிகள்

காவிரி குடிநீர் பணிகள்

காவிரி குடிநீர் பணிகள்

காவிரி குடிநீர் பணிகள்

ADDED : பிப் 06, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4188 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஒட்டன்சத்திரத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து அவர் கூறியதாவது: குடி தேவைக்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இருந்தபோதிலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்பவும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனுார், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1422 ஊரக குடியிருப்புகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 236 ஊரக குடியிருப்புகளுக்காக காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.4187.84 கோடி நிர்வாக ஒப்புதல் அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

இத்திட்டம் ஜல்ஜீவன் மிஷன், அம்ரூத் திட்டங்களின் நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தினால் 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள், 3728 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் என்றார்.

கலெக்டர் பூங்கொடி, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, தலைமை பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us