/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம் காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்
காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்
காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்
காவிரி நீர் திட்ட குழாய்களில் உடைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் தொற்று அபாய தண்ணீர் வினியோகம்

நிதி வீணடிப்பு
ஆர்.தயாளன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் : மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. ஒவ்வொரு நீர்த்தேக்க தொட்டிகளும் அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட்டு இதற்கான கட்டண விகிதம் கணக்கீடு செய்யப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இப்பணியில் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு தண்ணீர் வீணாகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பணம் விரயமாகி வருகிறது. இப்பிரச்னையால் விளைநிலங்களிலும் குடியிருப்புகளிலும் பாதிப்பு மட்டுமே அதிகரித்து வருகிறது.
அதிகாரிகள் அலட்சியம்
க.உமாமகேஸ்வரி, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் : இத்திட்டத்திற்கான குழாய்களில் போதிய தரமின்மையால் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. மெயின் ரோட்டில் இருந்து சில அடி துாரத்தில் குழாய் பதித்துள்ளனர்.
சுகாதாரக்கேடு அபாயம்
ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய நிர்வாகி, ரெட்டியார்சத்திரம் : உள்ளாட்சி அமைப்புகள் விலை கொடுத்து வாங்கும் காவிரி குடிநீர் வினியாக குளறுபடியால் சாக்கடையில் செல்லும் அவலம் பல கிராமங்களில் தொடர்கிறது. காவிரி தண்ணீர் நிர்ணயித்த நேரத்தில் வழங்குவதில் ஊழியர்கள் மெத்தனம் காட்டுகின்றனர். குளறுபடிகளால் தண்ணீர் வினியோக வாய்ப்பு இருந்த போதும் பல கிராமங்களில் செயற்கையாக தட்டுப்பாடு உருவாகும் அவல நிலை நீடிக்கிறது. குழாய் உடைப்புகளை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம், விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. தர்மத்துப்பட்டி, ஆலத்தூரான்பட்டி, டி.புதுப்பட்டி, கோபிநாதசுவாமி கோயில் விலக்கு உள்ளிட்ட இடங்களில் உடைப்புகள் அருகே தேங்கும் தண்ணீர், குட்டையாக மாறியுள்ளது. இப்பிரச்னையால் வினியோகிக்கப்படும் தண்ணீரின் சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது என்றார்.