/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு
ADDED : ஜூன் 16, 2025 02:07 AM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் நத்தம் நகர் பகுதி களுக்கான காவிரி குடிநீர் குழாயில், பாளையம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் காவிரி ஆற்றில் உள்ள புதுப்பாளையம், ரங்கநாதன் பேட்டை ஆகிய இரு இடங்களில் கிணறுகள் அமைத்து ஒரே ராட்சத குழாய்கள் மூலம் வெள்ளியணை, குஜிலியம் பாறை, கோவிலூர் வழியாக திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் 90 முதல் 95 லட்சம் லிட்டர் வரை குடிநீர் விநியோகம் நடைபெறுவதால், ஓரளவிற்கு குடிநீர் பிரச்சினையின்றி மக்கள் சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குழாய் பாதையில் பாளையம் தனியார் பேக்கரி அருகே காலையில் திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ரோட்டில் வெளியேறியது.
குழாயை மாற்றியமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை அல்லது நாளை திண்டுக்கல் நகர் பகுதிக்கு குடிநீர் சென்றுவிடும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.