/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு
கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு
கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு
கட்டட தொழிலாளி இறப்பு 5 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 13, 2025 05:52 AM
தாடிக்கொம்பு, : திண்டுக்கல் அருகே கட்டட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் குட்டத்துப்பட்டி மயிலாப்பூரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ஜேம்ஸ் 49. திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த காண்ட்ராக்டர் சத்தியநாராயணன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் குரும்பபட்டி மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி வெங்காய குடோன் அருகில் மோல்டிங் சீட்டை தனியாக பிரித்து கழட்டிக் கொண்டிருந்தபோது கழன்று விழுந்ததில் மார்பு, இடுப்பு பகுதியில் படுகாயம் அடைந்து இறந்தார்.
ஜேம்ஸ் மனைவி கிரேசி மேரி புகாரின் பேரில், காண்ட்ராக்ட் பணியில் ஈடுபட்ட சக்திநாராயணன், ஜெய கோபி, ரமேஷ், சரவணன், குமார் ஆகிய 5 நபர்கள் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.


