/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பற்றி எரிந்த கார், குடிநீர் தொட்டி ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பற்றி எரிந்த கார், குடிநீர் தொட்டி
ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பற்றி எரிந்த கார், குடிநீர் தொட்டி
ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பற்றி எரிந்த கார், குடிநீர் தொட்டி
ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பற்றி எரிந்த கார், குடிநீர் தொட்டி
ADDED : ஜூன் 08, 2025 12:46 AM

எரியோடு:திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் சீர்வரிசை ஊர்வலத்திற்கு வெடிக்கப்பட்ட பட்டாசால் கார், பேரூராட்சி குடிநீர் தொட்டி தீப்பற்றியது. அலுவலக, தள்ளு வண்டி கடை கண்ணாடி உடைந்து சேதமானது.
எரியோட்டில் நால் ரோடு பகுதி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த விழாவிற்காக அய்யலுார் ரோட்டில் இருந்து சீர்வரிசை ஊர்வலம் கடை வீதி வழியே வந்தது. ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்தனர். இதில் அப்பகுதியில் இருந்த வணிக வளாக அலுவலக கண்ணாடி, தள்ளுவண்டி கடை கண்ணாடிகள் சேதமாகின. மற்றொரு பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசினால் கார், அருகில் இருந்த பேரூராட்சி பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியும் எரிந்தன. அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.