காவிரி நீரை நிரப்ப பிரசார இயக்கம்
காவிரி நீரை நிரப்ப பிரசார இயக்கம்
காவிரி நீரை நிரப்ப பிரசார இயக்கம்
ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
குஜிலியம்பாறை : சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வடமதுரை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது தி.மு.க., ஆட்சி அமைந்தால் கரூர் காவிரி நீரை கொண்டு வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள குளங்களை நிரப்புவோம் என்றார்.
தி.மு.க., ஆட்சி அமைந்த நிலையில் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு செய்து ஆய்வு பணி மட்டும் நடந்துள்ளது. ஆனால் பணி துவங்க வில்லை . தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் சார்பில் வேலை காலியிடங்களை நிரப்பிட கோரியும், குஜிலியம்பாறை தாலுகா பகுதி குளங்களை காவிரி நீரை நிரப்பிட கோரியும் ஜூன் 15ல் வாகன ஊர்வலம் நடக்கிறது.