Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 05, 2025 01:37 AM


Google News
திண்டுக்கல்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பு : மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மாணவர்களுக்கென 50 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 28, மாணவிகளுக்கு 13 , கல்லுாரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 1, மாணவிகளுக்கு 8 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் பயில்வோரும் சேரலாம். விடுதிகளில் தங்க கட்டணம் கிடையாது. அனைத்து மாணவர்ளுக்கு 3 வேளை உணவு, 10-ம் வகுப்பு வரை பயில்வோருக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10, 12 ம் வகுப்பு பயில்வோருக்கு நீட், ஜே.இ.இ.,நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நுால்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் துாரம் குறைந்தபட்சம் 8 கி.மீ., க்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை விடுதி காப்பாளர், மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூன் 18 க்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us