/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையை தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: மக்காத குப்பையால் அதிகரிக்கும் மாசால் தொற்று குப்பையை தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: மக்காத குப்பையால் அதிகரிக்கும் மாசால் தொற்று
குப்பையை தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: மக்காத குப்பையால் அதிகரிக்கும் மாசால் தொற்று
குப்பையை தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: மக்காத குப்பையால் அதிகரிக்கும் மாசால் தொற்று
குப்பையை தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: மக்காத குப்பையால் அதிகரிக்கும் மாசால் தொற்று
ADDED : ஜூன் 26, 2025 01:40 AM

மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி மூன்று நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் மக்கும் ,மக்காத குப்பை பிரிக்கப்படுவதில்லை. மொத்தமாக ஓடைப்பகுதிகள், ரோடு பகுதிகளில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019ல் தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மளிகைக் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், திரை அரங்குகள் பேக்கரிகள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் கேரி பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
குப்பையுடன் சேர்த்து கழிவுகளாக கொட்டப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பிரித்து எடுக்கப் படாமல் எரிக்கப்படுவதால் அதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது.
இவை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகும். இவை வளிமண்டலத்தில் கலந்து விடுவதால் ஓசோன் மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் புவி வெப்பமயமாக்கல் அதிகரித்து பருவ நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குப்பையை எரிப்பதால் உருவாகும் புகையால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.