/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கட்டுமான பொருட்கள், பர்னிச்சர் கண்காட்சி கட்டுமான பொருட்கள், பர்னிச்சர் கண்காட்சி
கட்டுமான பொருட்கள், பர்னிச்சர் கண்காட்சி
கட்டுமான பொருட்கள், பர்னிச்சர் கண்காட்சி
கட்டுமான பொருட்கள், பர்னிச்சர் கண்காட்சி
ADDED : செப் 21, 2025 04:38 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வேலு திருமண மஹாலில் சிவில் இன்ஜினியர் வெல்பேர் அசோசியேஷன் சார்பில் கட்டுமான பொருட்கள் , பர்னிச்சர் கண்காட்சி தொடங்கியது. திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி திறந்து வைத்தார்.
சிவில் இன்ஜினியர் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் கணேசன், அனுஜ் டைல்ஸ் உரிமையாளர் காளிமுத்து, சாசனத்தலைவர் முத்துகிருஷ்ணன் விளக்கேற்றினர். செயலாளர் சிவக்குமார் ,பொருளாளர் பிரகலாதன், துணைத் தலைவர் பாண்டி, பாபு ,கனகராஜ், முன்னாள் தலைவர்கள் டேவிட் ,பிராங்க்ளின் , வரதராஜன் ,அப்துல் சமது கலந்து கொண்டனர்
கண்காட்சியில் நுாற்றுக்கு மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன . முன்னணி கம்பி நிறுவனங்களின் கட்டுமான பொருட்கள், டைல்ஸ் ,வாட்டர் ஹீட்டர் , சோபா செட் ,கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், குஷன் சேர், மெத்தைகள் போன்ற எண்ணற்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன என ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.