/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாது முற்றுகை பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாது முற்றுகை
பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாது முற்றுகை
பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாது முற்றுகை
பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாது முற்றுகை
ADDED : ஜூன் 10, 2025 01:55 AM
கொடைரோடு: அம்மாபட்டி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாவுத்தம்பட்டி, பொம்மனம்பட்டி, உச்சனம்பட்டி, பாலம்பட்டி உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 134 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மே 30ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த இடத்திற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களை நியமிக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.
ஆனால் நிர்வாகம் கல்லடிபட்டி ஆர்.சி. பள்ளி ஆசிரியர் ஒருவரை நியமித்தது. நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி , வட்டார கல்வி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது.