/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள் 'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள்
'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள்
'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள்
'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள்
ADDED : மே 29, 2025 02:01 AM

கொடைக்கானல்,: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாரல் மழையுடன் வீசிய சூறைக் காற்றில் ஏராளமான மலைவாழைகள் சேதமடைந்து விவசாயிகள் பாதித்தனர்.
கொடைக்கானல் மன்னவனுார், கும்பூர், கீழானவயல் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மலைவாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது.
மேலும் அவகடா, ஆரஞ்சு உள்ளிட்ட மலைப் பயிர்களும் சேதமடைந்தன. காற்றிற்கு சாய்ந்த மலைவாழைகளை தோட்டக்கலைத்துறையினர் ஆய்வுசெய்தனர்.
வழக்கத்திற்கு மாறாக வீசிய காற்றால் வாழைகள் சேதம் அடைந்தால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர்.
பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.