ADDED : ஜன 29, 2024 06:21 AM

ஒட்டன்சத்திரம்: அம்பிளிக்கை ஜேக்கப் கிறிஸ்தவ கல்லுாரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கான ரத்தசோகை விழிப்புணர்வு கருத்தரங்கம் சத்திரப்பட்டி காந்தி சேவா சங்க வளாகத்தில் நடந்தது.
முன்னாள் அரசு மருத்துவர் ஆசைத்தம்பி தலைமை வகித்து ரத்த சோகையின் அறிகுறிகள், தடுக்க உதவும் உணவு பொருட்கள் குறித்து பேசினார். காந்தி சேவாசங்க நிறுவனர் வன்னிக்காளை முன்னிலை வகித்தார். மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட கையேடுகள் வழங்கப்பட்டது.