ADDED : ஜூன் 08, 2025 04:24 AM
பழநி : தட்டான்குளம் அருகே புது நகரில் ஓய்வு பாங்க் அலுவலர் கலைச்செல்வன் 63, வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் கார்த்திகா 37, கணவர் சுந்தரபாண்டியன் 40, உடன் வசித்து வருகிறார். இவர்கள் வேலை காரணமாக வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் மர்ம நபர்கள் சென்றுள்ளனர். போலீசார் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். திருட்டு எதுவும் நடைபெறவில்லை.
வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்த பிறகு பொருட்கள் திருடப்பட்டு உள்ளதா என தெரிய வரும்.
இப்பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. சுற்று பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.