ADDED : பிப் 12, 2024 05:29 AM
திண்டுக்கல்: கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி,கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் பிப்., மாதத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டி.ஆர்.ஓ., சேக் முகையதீன் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து உறுதிமொழி எடுத்துகொண்டனர்.