/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/படிப்போடு திறமைகளுக்கும் ஊக்கம் தந்த ஆண்டு விழாபடிப்போடு திறமைகளுக்கும் ஊக்கம் தந்த ஆண்டு விழா
படிப்போடு திறமைகளுக்கும் ஊக்கம் தந்த ஆண்டு விழா
படிப்போடு திறமைகளுக்கும் ஊக்கம் தந்த ஆண்டு விழா
படிப்போடு திறமைகளுக்கும் ஊக்கம் தந்த ஆண்டு விழா
ஒட்டன்சத்திரம்
மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது . மாணவர்கள் பள்ளிக்கு செல்வது படிப்பதற்கு மட்டுமல்ல தங்களது இதர திறமைகளையும் வெளிக்கொணர்ந்து தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகத்தான் என்பதை பறைசாற்றும் வகையில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி., மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. இதில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இதன் விழாவில் பங்கேற்றோர் மனம் திறந்ததாவது...
மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள்
மங்கள்ராம், பள்ளி செயலாளர்: மாணவர்கள் கல்வி கற்பது மட்டும் போதாது. அவர்களிடம் உள்ள பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ள ஏதுவாக ஆண்டு விழா அமைந்துள்ளது. கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மாணவர்களின் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய விதம் சிறப்புடன் இருந்தது. மாணவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் யோகா, செஸ், கராத்தே, சிலம்பம், கூடைப்பந்து, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், உலக அளவிலும் சாதித்த மாணவர்களை இந்த விழாவில் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வாகும்.
கலை நிகழ்ச்சிகள் அருமை
காயத்ரி மங்கள்ராம், பள்ளி செயலாளர்: இங்கு நடந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் திறமைகளை கண்டு வியந்தேன். படிப்பது மட்டுமே குறிக்கோள் என்பதை தாண்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேடையில் தங்களது குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் பார்த்து பூரித்து போனது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
தன்னம்பிக்கை விழா
பட்டாபிராமன், பள்ளி செயலாளர்: மாணவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவித்ததாக இந்தாண்டு விழா அமைந்தது. அவர்களின் நடனம், நாடகத்தில் பேசிய வசனங்களின் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இப்பள்ளியில் ஏற்படுத்தி வருகிறோம். படிப்பிற்கு அப்பாற்பட்டு விளையாட்டில் சாதித்த மாணவர்களை பாராட்டியது மற்ற மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது.
ரசிக்கும்படி இருந்தது
எம்.ரவி, முன்னாள் டி.ஜி.பி., : ஆண்டு விழாவ கலை நிகழ்ச்சிகளில் கிராம மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய விதம் மெச்சத் தகுந்ததாக இருந்தது. ஆண்டு விழா என்றால் பொழுதுபோக்கு விழா என்ற நிலைமையை மாற்றி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பல நிகழ்ச்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. வ.உ. சி. நாடகத்தில் மாணவர்கள் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தது ரசிக்கும்படி இருந்தது.
புத்துணர்ச்சி தந்த விழா
டாக்டர் பாலாஜி குமரவேல் (முன்னாள் மாணவர்) : 2003 ல் எனது பயணம் அக் ஷயாவில் தான் தொடங்கியது. ஆண்டுதோறும் பள்ளியில் ஆண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு விழாக்கள் நடத்தப்படுவதால் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்றனர். நான் படித்த போது இருந்த ஆசிரியர்களை இந்த ஆண்டு விழாவில் சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
இது ஒரு குடும்ப விழா
சவும்யா, பள்ளி முதல்வர்: சுட்டிக் குழந்தைகளின் மேடைப்பேச்சு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இது மாணவர்களின் தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத்திறமையை வளர்க்கும் விதத்தில் அமைந்தது. பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை திறனை வெளிக்கொணரும் வகையில் நடனம், நாடகம், இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. பெற்றோர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் வந்து குடும்ப விழாவாக பங்கு பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
பண்பாட்டை கற்றுத்தரும் பள்ளி
செல்வபிரியா, மாணவி:12 ஆண்டுகளாக பள்ளியில் படித்து வருகிறேன். படிப்பில் மட்டும் இப்படி சாதிக்கவில்லை பல்வேறுதிறமைகள் கொண்ட மாணவர்களை உருவாக்குவதிலும் இப்பள்ளி சிறந்து விளங்கியதை ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது தெரிய வந்தது. பள்ளி மாணவர்கள் இசைகளுக்கு ஏற்ப பல்வேறு நளினங்களை நடனத்தில் காட்டி இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
வண்ண ஆடைகளில் குழந்தைகள்
வருணிஷா,மாணவி: 10 ஆண்டுகளாக இந்த பள்ளியில் படித்து வருகிறேன். ஆண்டு விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்களின் கலர்புல் ஆடைகள் மனதிற்கு ரம்யமாக காட்சி அளித்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே நிகழ்ச்சி குறித்த விளக்கப்பட்டது இன்னும் மனதில் நிற்கிறது.