ADDED : ஜூன் 06, 2025 03:06 AM

நத்தம்: சிறுகுடி ஒடுகம்பட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நல்லகண்டத்தில் இருந்து முத்தாலம்மன், தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க ஒடுகம்பட்டி கோயில் முன்புள்ள மந்தைக்கு சென்றது.கோயில் சென்ற அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்கள்மாவிளக்கு, விளக்கு பூஜை என நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.