Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்

பழநியில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்

பழநியில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்

பழநியில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்

ADDED : ஜன 08, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை காமராஜ் பல்கலையில் பயின்றவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் டக்ளக்ஸ்ப்ரூட்ஸ். அப்போது ஹிந்து மதத்தால் ஈர்க்கப்பட்டு சுந்தரமூர்த்தி என பெயர் மாற்றிக் கொண்டார்.

பின் சொந்த நாடு சென்ற அவர் அங்கு உள்ளவர்களுக்கு ஹிந்து மதத்தை பற்றி தன் நாட்டினரிடம் விளக்கினார். அதனை ஏற்று ஹிந்து மதத்தை கற்று அறிந்த அமெரிக்கர்களை தமிழகத்திற்கு ஆண்டுதோறும் அழைத்து வருகிறார்.

2024 டிச.,28ல் அவருடன் தமிழகம் வந்த அமெரிக்க பக்தர்கள் 26 பேர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இதன் பின் வேட்டி, சட்டை, பெண்கள் சேலை அணிந்து நெற்றியில் திருநீறு திலகமிட்டப்படி படிப்பாதை வழியாக பழநி முருகன் கோயில் வந்தனர்.

இவர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். போகர் சன்னதியிலும் வழிபட்டனர். இதையடுத்து ராமேஸ்வரம் சென்று பிறகு திருச்செந்துார் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்ல உள்ளனர். மீண்டும் சிதம்பரம் செல்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us