ADDED : பிப் 25, 2024 05:41 AM
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
கூடுதல் பொறுப்பு துணைவேந்தர் காமகோடி தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மாணவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மேரிசாந்திராணி, அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமகிருஷ்ணன், மும்பை தலைமை டிஜிட்டல் அதிகாரி ராஜேந்திரன், விஞ்ஞானி மந்திரமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசினர்.பேராசிரியர்கள் சீதாலட்சுமி, ராஜா மோகன் பங்கேற்றனர்.